பிக்குகளின் சத்தியாக்கிரக போராட்டத்தின் பிண்ணனியில் ராஜபக்சக்கள்!

Sri Lanka Rajapaksa Family Current Political Scenario
By Shalini Balachandran Oct 27, 2026 09:34 AM GMT
Report

சிங்களப் பௌத்த அரசையும் மத உணர்வுகளையும் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு அண்மையில் ஏற்பாடு செய்ய முயற்சிக்கப்பட்ட போராட்டமானது ராஜபக்ச குடும்பத்தினரின் அரசியல் மூலோபாயத்தின் மற்றொரு அங்கமே என குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொழிலாளர் மக்கள் முன்னணியின் (Sri Lanka Workers' People's Front) தலைவர் சாமிர பெரேரா (Chamira Perera) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

யாழ் உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு...! லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

யாழ் உள்ளிட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு...! லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு

இரகசியப் பேச்சுவார்த்தை 

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் (Kingsbury Hotel) நடைபெற்றதாகக் கூறப்படும் இரகசியப் பேச்சுவார்த்தை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல்கள், இத்தகைய திட்டமிடப்பட்ட போராட்டங்களின் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கங்கள் குறித்துக் தீவிர சந்தேகங்களை எழுப்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

பிக்குகளின் சத்தியாக்கிரக போராட்டத்தின் பிண்ணனியில் ராஜபக்சக்கள்! | Kingsbury Meeting A Rajapaksa Plot Says Perera

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக தொடர்ந்து மக்களைப் பலிகடா ஆக்கி வரும் சக்திவாய்ந்த அரசியல் குழுவொன்றின் நடவடிக்கைகளையே இது காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

300 இற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னரான அரசியல் சூழலை தற்போதைய நிலைமை நினைவூட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

க்ரிஷ் வழக்கு தொடர்பான வாதங்களை நாளை முன்வைக்கும்படி CIABOCஇற்கு நீதவான் உத்தரவு

க்ரிஷ் வழக்கு தொடர்பான வாதங்களை நாளை முன்வைக்கும்படி CIABOCஇற்கு நீதவான் உத்தரவு

அரசியல் இலாபம்

அவர், இத்தகைய சந்திப்புகள் மற்றும் போராட்டங்கள் மூலம் அரசியல் இலாபத்திற்காகப் பொதுமக்களின் உணர்வுகள் மீண்டும் தூண்டப்பட்டுத் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகச் சாடியுள்ளார்.

கிங்ஸ்பரி ஹோட்டல் சந்திப்பில் பங்கேற்ற நபர்களின் அடையாளங்கள், அங்கு விவாதிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் அவர்களின் உண்மையான நோக்கங்கள் குறித்துப் பாதுகாப்புப் படையினரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் (CID) உடனடியாக விரிவான விசாரணைகளை நடத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிக்குகளின் சத்தியாக்கிரக போராட்டத்தின் பிண்ணனியில் ராஜபக்சக்கள்! | Kingsbury Meeting A Rajapaksa Plot Says Perera

இதில் சட்டங்கள் மீறப்பட்டிருப்பது உறுதியானால் சம்பந்தப்பட்ட நபர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (ICCPR) சட்டச் சட்டகத்திற்கு உட்பட்டு இச் சம்பவம் ஆராயப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இத்தகைய ஊழல் நிறைந்த மற்றும் சதித்திட்ட அரசியல் நடைமுறைகளை ஒழிப்பதற்காகவே மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) அதிகாரத்தை வழங்கியுள்ளனர் என நினைவூட்டிய அவர், ஜனாதிபதி உள்ளிட்ட பொறுப்பான அதிகாரிகள் இதில் தலையிட்டு கிங்ஸ்பரி சந்திப்பு குறித்த உண்மைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சூறாவளி அபாயத்தில் 25 இலங்கை படகுகள்: இந்திய எல்லைக்குள் நுழைய அனுமதி

சூறாவளி அபாயத்தில் 25 இலங்கை படகுகள்: இந்திய எல்லைக்குள் நுழைய அனுமதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026