யாழ். நெடுந்தூரப் பேருந்து நிலையம் - இணைந்த பேருந்துச் சேவை முடக்கம் – நீதிமன்றில் வழக்கு
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.
நேற்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்ட இணைந்த பேருந்துச் சேவை, இலங்கை போக்குவரத்துச் சபை அதில் இணையாத காரணத்தால் இதுவரை நடைமுறைக்கு வரவில்லை.
இணைந்த சேவையை முன்னெடுப்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தத்தமது நிலைப்பாடுகளில் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதால், சேவையைச் செயற்படுத்துவதில் இழுபறி நிலை நீடிக்கின்றது.
நேர அட்டவணை
இந்நிலையில், இணைந்த சேவையில் இலங்கை போக்குவரத்துச் சபை இணையாதமை தொடர்பில் நேற்று மாலை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய பேருந்து நிலையத்திலிருந்து இணைந்த நேர அட்டவணையின் கீழ் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஆரம்பித்து வைக்கப்பட்டு ஒரு நாள் கடந்துள்ள நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் இணைந்த பேருந்துச் சேவை நடைமுறைக்கு வராத நிலை தொடர்கின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |