ஆஸ்திரேலியாவின் பொறியியல் பீட மாணவிக்கு அடித்த அதிர்ஸ்டம்! ஒரே நிமிடத்தில் கோடிஸ்வரியாகிய சம்பவம்
ஆஸ்திரேலிய வங்கி ஒன்றின் தவறால் பெண் ஒருவர் பெண் கோடீஸ்வரியாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜியாக்சின் லீ என்ற பெண்ணுக்கே இந்த அதிர்ஸ்டம் அடித்துள்ளது.
குறித்த பெண் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு இயந்திரப் பொறியியல் படிக்கச் சென்றிருந்த போது ஆஸ்திரேலியாவின் வெஸ்ட்பேக் வங்கி (Westpac bank) அவரது கணக்கிற்கு வரம்பற்ற ஓவர் டிராஃப்ட் வசதியை தவறுதலாக வழங்கியுள்ளது.
இதனால் குறித்த பெண் ஒரே நிமிடத்தில் கோடீஸ்வரி ஆகியுள்ளார்.
கிறிஸ்டினின் ஆடம்பர வாழ்க்கை
இந்நிலையில், இது குறித்து கிறிஸ்டின் வங்கிக்கு எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் பணத்தை எடுத்து செலவழித்துள்ளார்.
கணக்கில்லாமல் பொருட்கள் கொள்வனவு செய்து ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளார்.
விலையுயர்ந்த ஆடைகள் மற்றும் நகைகளை வாங்கியதோடு விலையுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பையும் வாங்கியுள்ளார். மேலும், 2.50 லட்சம் ரூபாவை வேறு கணக்கில் மாற்றியுள்ளார்.
சுமார் 11 மாதங்களில் 18 கோடி ரூபாய் பணம் செலவழித்ததாகவும், அது குறித்து வங்கிக்கு தெரிவிக்கவில்லை என்றும் குறித்த வங்கி தெரிவித்துள்ளது.
கைது நடவடிக்கைகள்
இதனை தொடர்ந்து கிறிஸ்டின் கைது செய்யப்பட்டதோடு நீதிமன்றத்தில் குறித்த குற்றத்துக்கான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
விசாரணையில், பணத்தை பெற்றோர் கணக்கிற்கு மாற்றியதாக நினைத்தேன் எனக் கிறிஸ்டின் கூறினார். அவரது காதலனும் இது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்கு பிறகு அவர் மலேசியாவுக்கு தப்பிச் சென்றார்.
அவரிடம் இருந்து 10 கோடி ரூபா பணத் தொகையை மட்டுமே மீட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

