வெளிநாட்டிற்கு அனுப்புவதாகக் கூறி பணமோசடி - கிளிநொச்சியைச் சேர்ந்தவர் உள்ளிட்ட இருவர் கைது
இலங்கையில் இருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக போலியான உத்தரவாதங்களை வழங்கி பலரிடம் பணம் பெற்ற இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா கடற்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி
கடற்படையினர், காவல்துறையினருடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 30 மற்றும் 41 வயதுடைய இருவர் நீர்கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிலாபம் மற்றும் கிளிநொச்சியை வசிப்பிடமாகக் கொண்ட இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இவர்கள் 20 பேரிடம் இருந்து சுமார் 05 மில்லியன் ரூபாய்களை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இவ்வாறான மோசடிகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் கடற்படையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
