வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணமோசடி - வவுனியாவில் ஒருவர் கைது..!
Sri Lanka Police
Vavuniya
Sri Lanka Police Investigation
By Kiruththikan
வவுனியா- நெடுங்கேணி பகுதியில் வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி பணமோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை நெடுங்கேணி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர் வெளிநாடுகளுக்கு வேலையாட்களை அனுப்புவதாக கூறி நெடுங்கேணி பகுதியை சேர்ந்த சிலரிடம் பணத்தினை பெற்றுள்ளார்.
எனினும் நீண்ட நாட்களாகியும் வெளிநாட்டிற்கு அனுப்பாமையினால் பணத்தை வழங்கிய நபர்கள் அதனை மீளத்தருமாறு கோரியிருந்தும் சந்தேகநபரினால் பணம் மீள வழங்கப்படவில்லை.
14 நாட்கள் விளக்கமறியல்
இதனால் பாதிக்கப்பட்டவர்களால் காவல் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி