முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டு பயணச் செலவு : அம்பலப்படுத்திய பிரதமர்
முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) சிறப்பு வெளிப்படுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று (27.02.2025) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர்
இதன்போது கருத்து தெரிவித்த பிரதமர் ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பின்வருமாறு தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) 2010 முதல் 2014 வரை - 3,572 மில்லியன்
மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) - 2015 முதல் 2019 வரை 384 மில்லியன்
கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) - 2020 முதல் 2022 வரை 126 மில்லியன்
ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) - 2023 மற்றும் 2024 க்கு இடையில் 533 மில்லியன் என தெரிவித்துள்ளார்
மேலும் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க செப்டம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை 1.8 மில்லியன் பயன்படுத்தியதாகவும் 2010 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் 2013 ஆம் ஆண்டில் அதிக செலவு செய்யப்பட்டது எனவும் இது ரூ. 1,144 மில்லியன் என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
