அநுரவுக்கு சூனியம் வைத்த பிக்குகள்: ஞானசார தேரருக்காக தொடரும் போராட்டம்
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி, பிக்குகள் குழுவொன்றினால் சத்தியாக்கிரக போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த போராட்டம் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாக்கிரகம் இன்று (22) ஏழாவது நாளாகவும் தொடர்கின்றது.
கடந்த 16 ஆம் திகதி பிற்பகல் விகாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்த தேரர்கள் இந்த சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்ததுடன், அன்றைய தினம் அங்கு கொட்டகை ஒன்றை அமைக்க முற்பட்டபோது பொலிஸாருடன் அமைதியின்மை ஏற்பட்டது.
கலந்துரையாடல் தோல்வி
கலகொடஅத்தே ஞானசார தேரர் விடுவிக்கப்படும் வரை இந்த இடத்தை விட்டு நகரப்போவதில்லை என சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டுள்ள தேரர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 16 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக காத்திருந்த பிக்குகள் குழுவினர், பின்னர் புத்தசாசன அமைச்சுக்கு முன்பாகச் சென்றதுடன், அங்கு அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
அதன்பின்னர், குறித்த கலந்துரையாடல் தோல்வியடைந்ததாகக் கூறி, கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை விகாரமகாதேவி பூங்காவில் தங்கியிருப்பதாக தேரர்கள் குறிப்பிட்டனர்.
அநுரவுக்கு சூனியம்
இந்நிலையில் ஜனாதிபதியை தம்வசப்படும் நடவடிக்கையில் பௌத்த பிக்குகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதற்காக சில தினங்களுக்கு முன் இரவு அநுரவுக்கு சூனியம் வைத்து, அவரின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்காக மாந்தீரிக அடிப்படையிலான பூஜைகள் செய்யப்படுவதுடன், ஜனாதிபதி போன்ற பொம்மை ஒன்றை உருவாக்கி அதற்குள் தூய சக்திகளை ஏவும் பணியினை பிக்குகள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |