பொகவந்தலாவையில் குரங்கால் மின்சார விநியோகம் தடை
Sri Lanka
Ceylon Electricity Board
By Pavi
பொகவந்தலாவை நகரில் உள்ள மின்மாற்றி ஒன்றின் மீது குரங்கு ஏறியதால் சுமார் 45 நிமிடங்கள் மின்சார விநியோகம் தடைப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவம் நேற்று (10.11.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
பிற்பகல் 3.30 மணியளவில் தொலைபேசிக் கம்பிகள் வழியாக வந்த குரங்கு, நகரிலுள்ள உயர் மின்னழுத்த மின்மாற்றியின் மீது ஏறியபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
மஸ்கெலியா அலுவலக அதிகாரி
இதன் காரணமாகப் பொகவந்தலாவை நகரம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், வர்த்தக நடவடிக்கைகள் உள்ளிட்ட அன்றாடப் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் மஸ்கெலியா அலுவலக அதிகாரி ஒருவர், சம்பவம் இடம்பெற்று சுமார் 45 நிமிடங்களின் பின்னர் மின்சார விநியோகம் வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி