வெளிநாட்டுப் பயணிகளால் இலங்கைக்கு ஆபத்து..!! எச்சரிக்கை தகவல்
குரங்கு அம்மை
மேற்குலக நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் தொடர்பில் இலங்கையர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென யாழ். மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குரங்கு அம்மை தொற்று யாழில் இதுவரை பதிவாகவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள வைத்திய சங்கம், வெளிநாட்டு பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளது.
குரங்கு அம்மை நோய் தொடர்பில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது.
விசேட ஊடக சந்திப்பு
யாழ். மருத்துவ சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலையில் இது தொடர்பான விசேட ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இவ் ஊடக சந்திப்பில் பொது வைத்திய நிபுணர்களான கஜந்தன், கேதீஸ்வரன் ஆகியோரும் மகப்பேற்று வைத்திய நிபுணர் சிறீதரன், நுண்ணியல் தொற்று நோய் வைத்திய நிபுணர் ராஜந்தி ஆகியோரும் கலந்து குரங்கு அம்மை நோய் தொடர்பில் தெளிவூட்டல்களை வழங்கினர்.
