எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
இந்த மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை மறுஆய்வின் போது அதன் முழுச் சுமையையும் நுகர்வோர் மீது சுமத்தாமல் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதால் உள்நாட்டு எரிபொருள் விலைகளிலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
எனினும் சர்வதேச சந்தை விலை அதிகரிப்பின் முழுமையான தாக்கத்தையும் இலங்கையின் எரிபொருள் நுகர்வோர் மீது சுமத்த அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என அவர் தெரிவித்தார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைகள்
ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருள் விலைகள் மறு ஆய்வு செய்யப்படுவதாகவும் தற்போதைய நிலைமை தொடர் பான தகவல்கள் இன்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த மாத இறுதியில் மேற் கொள்ளப்படவுள்ள எரிபொருள் விலைத்திருத்தத்தின் போது, சர்வதேச சந்தை விலை உயர்வால் ஏற்படும் சுமையில் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக் கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
“உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்திருந்தாலும் அந்த முழுச் சுமையையும் நாட்டின் நுகர்வோர் மீது சுமத்துவதற்கு நடவடிக்கை எடுக்க மாட்டோம்” என அமைச்சர் தெரிவித்தார்.
அழுத்தத்தில் ஒரு பகுதி
கடந்த ஏப்ரல் - மே மற்றும் ஜூன் மாதங்களிலும் சர்வதேச எரிபொருள் விலை உயர்வால் ஏற்பட்ட அழுத்தத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோன்று இந்த மாத இறுதியில் எரிபொருள் விலைகளை மறுஆய்வு செய்த பின்னர் சர்வதேச விலை உயர்வால் ஏற்படும் சுமையில் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொள்வது தொடர்பில் நடவடிக்கை எடுக் கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |