அரச ஓய்வூதியதாரர்களுக்கு வெளியான முக்கிய தகவல்
2026 ஆண்டுக்கான ஓய்வூதியம் வழங்கும் திகதியை ஓய்வூதிய திணைக்களம் அறிவித்துள்ளது
குறித்த விடயத்தினை ஓய்வூதிய திணைக்களத்தின் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் சமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, ஓய்வூதிய சுற்றறிக்கை எண் 03/2025 மற்றும் Pen/Pol06/25-2024 மூலம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை
பொது கருவூலத்தின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி 09, பெப்ரவரி 10, மார்ச் 10, ஏப்ரல் 09, மே 08.

மற்றும் ஜூன் 10, ஜூலை 10, ஆகஸ்ட் 10, செப்டம்பர் 10, அக்டோபர் 07, நவம்பர் 10 மற்றும் டிசம்பர் 10 ஆகிய திகதிகளில் ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களுக்கு சிறப்பு முற்பணம்
இதேவேளை, அரச ஊழியர்களுக்கு சிறப்பு முற்பணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார (Aloka Bandara) வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் படி, அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் வரை சிறப்பு முற்பணம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கொடுப்பனவுகள் அடுத்த வருடம் ஜனவரி 1 முதல் பெப்ரவரி 28 வரை வழங்கப்படும் என கூறப்படுகின்றது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி 11 மணி நேரம் முன்