இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள் - முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா...!
இந்த ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், இந்த மாதத்தில் மாத்திரம் 22,667 இந்திய பிரஜைகள் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா சுற்றுலாப் பயணிகள்
மேலும், சீனாவில் இருந்து 7,896 பயணிகளும் ஜேர்மனியில் இருந்து 6,966 பயணிகளும் பிரான்சிலிருந்து 5,584, பயணிகளும் ரஷ்யாவில் இருந்து 5,296, பயணிகளும் இத்தாலியில் இருந்து 4,666, பயணிகளும் அவுஸ்திரேலியாவில் இருந்து 4,092, பயணிகளும் கனடாவில் இருந்து 3,988 பயணிகளும் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வருடத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் 877,867 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
அதேவேளை, கடந்த ஜூலை மாதம் மாத்திரம் 143,039 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தநிலையில்,கடந்த 2022 ஆண்டு ஓகஸ்ட் மாதம் மாத்திரம் 37,760 பேர் மாத்திரமே நாட்டிற்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.