பாதுகாப்புக் கமராவில் பதிவாகிய அமானுஷ்ய உயிரினம்! வைரலாகும் காணொளி
பாதுகாப்புக் கமராவில் பதிவாகிய மர்ம உயிரினம்
உலகம் முழுவதும் உள்ள அமானுஷ்ய ஆர்வலர்களிடையே விவாதத்தை கிளப்பியுள்ள காணொளி ஒன்று அமெரிக்காவில் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் ஒரு வீட்டின் அருகே வெளிறிய மர்ம உருவம் இருப்பதைக் காட்டும் காணொளியே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் காணொளி அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராவில் பதிவாகிய நிலையில், Paranormality Magazine அதன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.
அமானுஷ்யமா
Here's the video of the Pale creature caught on a security cam near Moorhead, KY. #cryptid pic.twitter.com/jCexxlQTA0
— Paranormality Magazine (@ParanormalityM) July 9, 2022
குறித்த மர்ம உருவம், ஹொலிவுட்டில் ஸ்பெக்ட்ரல் திரைப்படத்தில் அழிவை ஏற்படுத்திய மனித உருவங்களை ஒத்திருக்கிறது.
33 வினாடிகள் கொண்ட காணொளியில் வெளிறிய, மனிதனைப் போன்ற உருவம் உள்ளது. அது ஒரு வீட்டின் பின்புற தோட்டத்திற்கு அருகில் நெளிந்து குனிந்தபடி நடந்தது செல்கிறது.
இந்தக் காணொளி தற்போது, சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.
