2023 இல் அதிகளவான போதைப்பொருள் கைப்பற்றல்கள் : சுங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்
கடந்த வருடத்திலேயே அதிகளவான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கடந்த வருடத்தில் சுமார் இரண்டரை பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளை கைப்பற்றியதுடன், 81 சந்தேக நபர்களை கைது செய்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் திணைக்கள அதிகாரிகள் அறியத்தருகையில்,
போலி முகவரிகள்
கடந்த சில வருடங்களில் சுங்கத்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் கைப்பற்றியமையை நோக்கும் போது, கடந்த வருடத்திலேயே அதிக தொகை கொண்ட போதைப்பொருளை கைப்பற்றப்பட்டுள்ளது.

ஹெரோயின், ஹஸிஸ், கொக்கெய்ன் மற்றும் போதை மாத்திரைகளே அதிகளவு கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து கொழும்பு, நுகேகொடை, அநுராதபுரம், கண்டி, பாணந்துறை ஆகிய இடங்களில் வசிக்கும் நபர்கள் சிலருக்கு இப்போதைப்பொருள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த முகவரிகளை விசாரித்த போது, அவை போலி முகவரிகளென தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், அவை மேலதிக விசாரணைக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.” என சுட்டிக்காட்டியுள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        