மட்டு சந்திவெளி தொடருந்து தண்டவாளத்திற்கு அருகில் மோட்டார் குண்டு மீட்பு
Sri Lanka Police
STF
Batticaloa
By Bavan
மட்டக்களப்பு சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள வெட்டாறு சோலை பகுதி தொடருந்து தண்டவாளத்திற்கு அருகில் கைவிடப்பட்டிருந்த 61 மில்லி மீற்றர் ரக மோட்டார் குண்டு ஒன்றை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) மீட்டுள்ளதாக சந்திவெளி காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறைக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய குறித்த பகுதியில் கைவிடப்பட்டிருந்து மோட்டார் குண்டை விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் உதவியுடன் மீட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கை
இவ்வாறு மீட்கப்பட்ட குண்டை வெடிக்க வைப்பதற்கு நீதிமன்ற உத்தரவை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர்தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி