ரஷ்ய இராணுவவீரர்களின் சடலங்களால் நிரம்பி வழியும் பிரேத அறைகள்
உக்ரைன் மீதான படையெடுப்பை மேற்கொண்டுள்ள ரஷ்ய படையினருக்கு அந்தப்போர் மிகவும் இலகுவாக இருக்கப்போவதில்லை என்பது தற்போது புரிந்திருக்கும்.
ஏனெனில் அவர்கள் எதிர்பார்த்த வெற்றி இதுவரை கிடைக்காததால் ரஷ்ய படையினர் மத்தியில் பெரும் மனச்சோர்வு ஏற்பட்டதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு மனச்சோர்வு ஏற்பட்டுள்ள அவர்கள் யுத்த களத்தில் சரியாக போரிடமுடியாத நிலையில் பெரும் இழப்புக்களை சந்தித்து வருவதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு போரில் உயிரிழந்த ரஷ்ய படையினரின் சடலங்கள் பெலாராஸ் நாட்டின் பிரேத அறைகளில் குவிந்து கிடப்பதாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர்.
போரில் கொல்லப்பட்ட ரஷ்ய வீரர்களின் சடலங்கள் டிரக்குகள் மூலம் பெலாரஸில் உள்ள பிரேத அறைக்கு கொண்ட செல்லப்படுவதாகவும், பின் அங்கிருந்து விமானம் அல்லது ரயில் மூலம் ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டு வருவதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
பெலாரஸ் நகரங்களான Mozyr, Homel மற்றும் Narouila-வில் உள்ள பிரேத அறைகளே நிரம்புள்ளதாக உள்ளூர்வாசிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
