ஈரானை நிலை குலைய வைத்த மொசாட்டின் அதிரடித் தாக்குதல்
ஈரானிய அதிபரின் மரணம் பற்றிய மர்மம் நீடித்துக் கொண்டிருக்கின்ற இன்றைய சூழலில், இஸ்ரேலின் உளவு அமைப்பின் (mossad) காரங்கள் எந்த அளவுக்கு வலுவுள்ளவை என்பது பற்றியும், அந்தக் கரங்கள் எங்கெங்கெல்லாம் நீண்டு சென்று எப்பயெப்படியான காரியங்களையெல்லாம் செய்து விட வல்லது என்பதை புரிந்து கொள்வதற்கும், மூன்று வருடங்களுக்கு முன்னர், ஈரான் (iran) தலைநகர் டெகரானுக்கு அருகில் இஸ்ரேலிய மொசாட் (Israeli mossad ) மேற்கொண்ட ஒரு இரகசியத் தாக்குதலை மீட்டுப் பார்க்க வேண்டி இருக்கின்றது.
உலக வரலாற்றில் அப்படியான ஒரு தாக்குதல் அதுவரை மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்று உலகின் அனைத்து ஆய்வாளர்களும் வியக்கும்படியான ஒரு தாக்குதல்.
இன்றுவரைக்கும், அந்தத் தாக்குதல் தொடர்பான ஆதாரங்களை ஈரான் தேடிக்கொண்டிருக்கும் அளவுக்கு, மிக மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு கச்சிதமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு தாக்குதல்.
இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் என்றால் யார் என்பதை மறுபடியும் உலகம் வியந்து அச்சத்துடன் பார்த்த அந்த மர்மத் தாக்குதலை மீட்டுப் பார்க்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 4 நாட்கள் முன்