ஈராக்கிலுள்ள மொசாட் அலுவலகம் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல்!
வடக்கு ஈராக்கிய நகரமான எர்பிலில் உள்ள இஸ்ரேலிய உளவுப்பிரிவான மொசாட் அலுவலகத்தை இலக்கு வைத்து ஆளில்லா வானூர்தி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈரான் ஆதரவு அஷாப் அல்-கஹ்ஃப் ஆயுதக்குழு இதனை தெரிவித்துள்ளது.
தங்களது உத்தியோகபூர்வ டெலிகிராம் (Telegram) செனலில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தத் தாக்குதலை அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
பதற்றமான சூழல்
அத்துடன், ஈராக் முழுவதும் பரவியுள்ள அமெரிக்க இராணுவத் தளங்களிலிருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறும் அந்த அமைப்பு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில் ஈராக்கில் உள்ள வெளிநாட்டு இராணுவ நிலைகள் மற்றும் உளவுத்துறை அலுவலகங்களை இலக்கு வைத்து இத்தகைய தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த உத்தியோகபூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |