சீனாவுக்கு எதிரான இந்தியாவின் அடுத்தக்கட்ட நகர்வு: இராணுவத்தில் இணைக்கப்பட்ட அதி பயங்கர ஆயுதம்
China
India
World
By Dilakshan
அருணாச்சல பிரதேச எல்லைகளில் சீனா அதிக அளவு படைகளை குவித்துள்ள நிலையில் இந்தியாவானது அதிரடி தீர்மானமொன்றை எடுத்துள்ளது.
இந்திய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட அதி சக்திவாய்ந்த ரேம்பேஜ் என்ற ஏவுகணையை தனது விமானப்படைகளிலும் கடற்படைகளிலும் இந்தியா இணைத்துள்ளது.
வேகம்
குறித்த ஏவுகணையானது, 250 கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் இலக்கை கூட துல்லியமாக தாக்கக் கூடிய திறன் கொண்டது.
அத்தோடு, இது ஒலியை விடவும் இரண்டு மடங்கு வேகத்தில் பயணித்து இலக்கை தாக்கும் எனக் கூறப்படுகிறது.
இராணுவ பலம்
புதிதாக சேர்க்கப்பட்ட இந்த ஏவுகணையினால் இந்திய விமானப்படை மற்றும் கடற்படையின் திறன் மேலும் அதிகரிக்கும் என்று அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரேம்பேஜ் ஏவுகணை சுகோய்-30 எம்கேஐ மற்றும் மிக்-29 ஆகிய போர் விமானங்களில் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி