கூகுளின் தேடல் பொறியில் முதலிடம் பிடித்த இலங்கை
உலக அளவில் செக்ஸ் (sex) எனும் வார்த்தையை அதிகம் கூகுளில் தேடிய நாடுகளின் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
கூகுள் நிறுவனம் பட்டியலிட்டுள்ள நாடுகளின் வரிசையில் மீண்டும் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது.
கூகுள் ட்ரெண்ட் அறிக்கை

கூகுள் ட்ரெண்ட் (Google Trends) வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான சமீபத்திய அறிக்கையில் இது வெளிப்பட்டுள்ளது.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் இலங்கையும் இரண்டாவது இடத்தை வியட்நாமும், மூன்றாவது இடத்தை பங்களாதேசும் பெற்றுள்ளன.
மாகாணம்

குறித்த சொல்லை இலங்கையில் அதிகளவில் தேடிய மாகாணமாக வட மத்திய மாகாணம் முதலிடத்தில் உள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் கூகுள் நிறுவனம் வெளியிட்ட இந்த பட்டியலில் இலங்கை முதல் இடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS