அன்னை பூபதியின் நினைவு தினம்! ஆரம்பமானது சிரமதான பணிகள்
எதிர்வரும் 19 ஆம் திகதி தியாக தீபம் அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், இன்று (1) சிரமதான பணிகள் நடைபெற்றுள்ளன.
மட்டக்களப்பு நாவலடியில் அமைக்கப்பட்டுள்ள அவரின் நினைவு இல்லத்தில் இந்த சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிரமதான பணிகள்
இந்த சிரமதான பணியில் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
கடந்த 1988 ஆம் ஆண்டு இந்திய இராணுவத்தினரை வெளியேறுமாறு கோரி 8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அன்னை பூபதியம்மா மட்டு மாமாங்கேஸ்வர ஆலய முன்றலில் மார்ச் 19 ஆம் திகதி உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்த நிலையில், ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி உயிர் நீத்தார்.
தியாக தீபம் அன்னை பூபதியம்மா உண்ணாவிரதம் ஆரம்பித்த திகதியான மார்ச் 19 ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 19 வரை அன்னை பூபதி மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
இந்த பின்னணியில், அன்னை பூபதியின் 36 ஆவது ஆண்டு எதிர்வரும் 19 ஆம் திகதி நினைவுகூரப்படவுள்ள நிலையில், இதனை முன்னிட்டு சிரமதான பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |