மனிதர்கள் ஸ்பரிசம் செய்த சிறுத்தை குட்டி - தாய் சிறுத்தையின் செயல்!
Nuwara Eliya
Sri Lanka
By Pakirathan
தலவாக்கலையில் தேயிலை தோட்டத்தில் நிர்க்கத்தியான சிறுத்தை குட்டியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறுத்தை குட்டியை தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தோட்ட தொழிலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
பின்னர் குறித்த சிறுத்தை குட்டியை சிகிச்சைக்காக ரன்தெனிகல கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்ப வனவிலங்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
தாய் சிறுத்தை
கண்டுபிடிக்கப்பட்ட குட்டியை தாய் சிறுத்தையிடம் பலமுறை ஒப்படைக்க முயன்றபோதிலும் தாய் சிறுத்தை தனது குட்டியை ஏற்க மறுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுத்தைக் குட்டியானது மனிதர்களால் தொடப்பட்டுள்ளது என்பதை மோப்பத்தின் மூலம் குறித்த தாய் சிறுத்தை தனது குட்டியை ஏற்க மறுப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி