மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தாய் பலி!
Sri Lanka Police
Sri Lanka
Sri Lankan Peoples
By Dilakshan
நுவரெலியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் விவசாய காணியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று (03) அதிகாலை நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தனது விவசாய தோட்டத்திற்கு மரக்கறி வகைகளுக்கு நீர் பாய்ச்சுவதற்காக போடப்பட்டிருந்த மின்சார கம்பியினை அப்புறப்படுத்த முயற்சி செய்தபோது மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர் 3 பிள்ளைகளின் தாயான 45 வயதுடைய மைக்கல் எக்லஸ் என தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதோடு, சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்