மகனை நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் - தமிழ்த் தாயின் கோரிக்கை
தமது மகன் சிறிலங்காவிற்கு நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு தலையீடு செய்யுமாறு, அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பனீஸிடம் தமிழ்த் தாய் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ரீட்டா அருள் ரூபன் எனப்படும் குறித்த பெண் சிறிலங்காவிலிருந்து 2012 ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சென்று தற்காலிக பாதுகாப்பு விசாவில் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக வசித்துள்ளார்.
அதன் பின்னர் அவருக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்பட்டது.
விண்ணப்பம் மறுக்கப்பட்டமை

இதனையடுத்து அவர் தனது மகனை அவுஸ்திரேலியாவில் குடிமயர்த்துவதற்கான நடவடிக்கையை எடுத்திருந்த நிலையில், அவரது விண்ணப்பத்தை அந்த நாட்டு குடிவரவுத் துறை 2016ஆம் ஆண்டு மறுத்தது.
எனினும் அவரது மகன் விமானம் மூலம் அவுஸ்திரேலியா சென்ற நிலையில் மெல்போர்ன் நகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் மகனை மீண்டும் சிறிலங்காவிற்கு அனுப்புவதைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அவுஸ்திரேலிய பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 7 மணி நேரம் முன்