பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் திடீரென பற்றிய தீ..! வவுனியாவில் சம்பவம் (படம்)
Vavuniya
Fire
By Vanan
வவுனியா - நகரப் பகுதியில் மோட்டர் சைக்கிள் ஒன்று
திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த அனர்த்தம் இன்று இடம்பெற்றுள்ளது.
பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்
வவுனியா - மணிக்கூட்டுகோபுரச் சந்திக்கு அருகில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றே திடீரென்று தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனையடுத்து அங்கு நின்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
தீப்பிடிக்கும் போது இரு சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணித்திருந்தனர். ஆனாலும் அவர்களுக்கு, அதிர்ஷ்டவசமாக பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி