மகிந்த முன்னிலையில் கதறி அழுத மொட்டு எம்.பி
கதறி அழுத எம்.பி
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினருமான ரோஹித அபேகுணவர்தன, மே 9 ஆம் திகதி தனது வீடு உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தாக்கப்பட்ட சம்பவங்களை நினைவு கூர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் களுத்துறையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கண்ணீர் மல்கினார்.
பயங்கரவாத சம்பவம்
இந்த கூட்டத்தில் உரையாற்றிய ரோஹித அபேகுணவர்தன, மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் ஒரு பயங்கரவாத சம்பவமாகும்.
அன்றைய தினம் எனது வீட்டில் இடம்பெற்ற தாக்குதலின் போது அதிஷ்டவசமாக எனது தாயார் உயர் தப்பினார். இன்று அவர் இங்கு வந்திருக்கின்றார்.
தற்போது கிடைத்துள்ள வாழ்க்கை ஒரு போனஸாகும். அதனை கொண்டு மீண்டும் ஸ்ரீலங்க பொது ஜன பெரமுனவின் ஆட்சி பலமாக எழுச்சி பெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.