கிழக்கு மாகாண அபிவிருத்தி : இந்தியாவுடனான ஒப்பந்தத்திற்கு அனுமதி
இலங்கைக்கும்(sri lanka) இந்தியாவுக்கும் (india)இடையிலான சமூக-பொருளாதார அபிவிருத்தி மற்றும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் (MoU) கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால்(anura kumara dissanayake) முன்மொழியப்பட்ட இந்த முயற்சியின் மூலம் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களுக்கு ரூ. 2,371 மில்லியன் செலவிடப்படவுள்ளது.
பல்வேறு துறைகளில் அபிவிருத்தி
கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றுலா மற்றும் சமூக வலுவூட்டல் உள்ளிட்ட துறைகளில் முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளன.
இந்த புனரமைப்பு திட்டங்களின்படி இந்தியா கல்விக்காக ரூ. 315 மில்லியன், சுகாதாரத்திற்காக ரூ. 780 மில்லியன், மற்றும் விவசாயத் துறைகளுக்கு ரூ. 620 மில்லியன் வழங்கவுள்ளது.
அதன்படி, உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பது மற்றும் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்துவது ஆகியவை திட்டங்களின் நோக்கமாகும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |