அரசாங்கத்தினுள் ஓரினச் சேர்க்கையாளர்கள்: அம்பலப்படுத்திய அர்ச்சுனா
அரசாங்கத்தின் உள்ளே ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “எந்த பெற்றோரும் தனது பிள்ளை ஓரினச் சேர்க்கையாளராக மாறுவதை விரும்பமாட்டார்கள்.
பிரச்சினை
நாங்கள் பின்பற்றுவது இந்து, பௌத்தம் மற்றும் இஸ்லாம் மதங்களாகும் இவற்றில் இதற்கு இடமில்லை.
யாருக்காவது ஏதும் பிரச்சினை என்றால் வைத்திய முறையில் தீர்வை வழங்குவோம்.
எதிர்கால சந்ததி
நாட்டை வீணாக்க முடியாது, வெளிநாட்டில் இருந்து ஆட்களை கொண்டு வந்து “LGBTQ" படம் காட்ட முடியாது.
யாருடைய பிள்ளையும் நாசமாக நான் விடமாட்டேன். இந்த நாட்டை அமெரிக்காவாக மாற்ற வேண்டாம் அதை சட்டமாக்கி எதிர்கால சந்ததியை நாசமாக்க வேண்டாம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
