நாடாளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா எம்.பி
நாடாளுமன்ற அலுவல்களுக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் (ramanathan archchuna)சபை நடவடிக்கையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இன்று (8) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, நடைமுறை குறித்த கேள்வியை எழுப்பியபோது ஏற்பட்ட சிக்கல் சூழ்நிலை காரணமாக, அவர் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
அர்ச்சுனா எம்.பியை வெளியேற்ற நடவடிக்கை
சபைக்கு தலைமை தாங்கிய அவைத் தலைவர் அரவிந்த செனரத், அர்ச்சுனா எம்.பியை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.
அவரைக் கட்டுப்படுத்திக் கொள்ளுமாறு அவைத்தலைவரின் ஆலோசனையைக் கேட்கத் தவறியதற்காக நிலையியற் கட்டளை 71 இன் கீழ் அவர் வெளியேற்றப்பட்டார்.
தவறான நடத்தைக்காக சபையின் எஞ்சிய காலத்திற்கு ஒரு உறுப்பினரை நீக்குவதற்கு நிலையியற் கட்டளைகளில் வழங்கப்பட்டுள்ள விதிகள் குறித்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க அவைத் தலைவருக்கு நினைவூட்டியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் 19 ஆம் திகதி அடுத்த 8 அமர்வு நாட்களில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் (Ramanathan Archchuna) நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும், கருத்துகள் மற்றும் உரைகளை நேரடியாக ஒலி,ஒளிபரப்பு செய்வதற்கு சபாநாயகரினால் தடை விதிக்கப்பட்lமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
