நெருங்கிய சகாவின் அதிரடி கைது...! நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்ட அநுர
முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல நேற்று (13) கைது செய்யப்பட்டிருந்தார்.
சபுகஸ்கந்த, தெனிமல்ல பிரதேசத்தில் 11 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதையடுத்து, நேற்றைய தினமே அவருக்கு பிணையும் வழங்கப்பட்டிருந்தது.
விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தின் போது அவர் மதுபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகி இருந்த நிலையில், அவர் மதுபோதையில் இருக்கவில்லை என காவல்துறை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
நாட்டில் ஏற்பட்ட பேரழிவை பயன்படுத்தி பாரிய அரசியல் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தொடர்பில் வெளியாகும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அத்தோடு, எதிர்கட்சிகளின் அடுத்த கட்ட அரசியல் நகர்வுக்கு இது பெரும் வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.
இது தொடர்பிலும், தற்போதைய அரசியல் களம், எதிர்கட்சிகளின் அடுத்த கட்ட அரசியல் நகர்வு, குறித்த கைது குறித்த விரிவான பிண்ணனி மற்றும் பலதரபட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் இன்றைய நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |