கஜேந்திரகுமார் கைது விவகாரத்தின் மர்மங்கள் - அலசும் ஆய்வாளர்..!
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் அண்மையச் செயற்பாடுகள் பற்றியும், அவர் மீதான கொலை அச்சுறுத்தல் செய்திகள் பற்றியும், கைது நடவடிக்கைகள் பற்றியும், ஏன் கஜேந்திரக்குமார் பொன்னம்பலத்திற்கு மாத்திரம் இதுபோன்ற நெருக்குதல் நடைபெறுகின்றன என்பது பற்றியுமான ஒரு ஆய்வுக் கண்ணோட்டத்தை குணா கவியழகன் தனது வலையொளி பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குணா கவியழகன் புலம்பெயர் தேசத்தில் அனைவரும் அறிந்த பிரபலமான ஒரு அரசியல் ஆய்வாளர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு தளபதியாக, அரசியல் பிரிவின் முக்கியஸ்தராக முன்னர் பணியாற்றியவர். தற்பொழுது அரசியல் அறிவு இயக்கச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்டு வருகின்ற ‘கதாநாயக பிம்பம்’ ரணிலின் நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஒரு காரியம் என்றும் அவர் தனது ஆய்வில் மர்மம் உடைத்திருக்கின்றார்.
கஜேந்திரகுமார் மீது கட்டமைக்கப்பட்டு வருகின்ற பிம்பங்களின் பின்னணி பற்றிய குணா கவியழகனின் முழுமையான ஆய்வினை இந்த இணைப்பில் பார்க்கலாம்:
