நாடாளுமன்றில் தனித்து விடப்பட்டுள்ள மகிந்த - விலகும் நெருங்கிய சகாக்கள்!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவை விட்டு விலகும் செயல்பாடுகள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக நாடாளுமன்றத்தில் இதனை நன்கு அவதானிக்க முடிவதாக தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் நெருங்கிய உறவை பேண எண்ணுவதால் இந்த மாற்றத்தை காணக்கூடியதாக உள்ளதாக கூறப்படுகின்றது.
விலகும் நெருங்கிய சகாக்கள்
முன்பு நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் அவர் அமர்ந்திருக்கும் போது அவரை சுற்றி ஏராளமானவர்கள் இருந்ததாகவும், தற்போது அது வெகுவாக குறைந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.
அதேசமயம், முன்பு நாடாளுமன்ற வளாகத்தில் மகிந்த நுழைந்ததும் அவரை கண்டு வரவேற்க பலர் செல்வதாகவும், தற்போது எவரும் அவரை கண்டு கொள்வதில்லை எனவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
