அர்ச்சுனா எம்பி மீது விதிக்கப்பட்ட தடை : சபையில் கொந்தளித்த சிறீதரன்
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna), நாடாளுமன்றத்தில் ஏதேனும் தவறுதலாக பேசியிருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் நாங்கள் மன்னிப்பு கேட்கின்றோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை அர்ச்சுனாவுக்கு நாடாளுமன்றில் விதிக்கப்பட்டிருக்கும் தடைகள் குறித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சபாநாயக்கரின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் கட்டுப்படுகின்றோம் ஆனால் ஒரு சமயம் சார்ந்து அல்லது பெண்கள் சார்ந்து கொட்டும் வன்மங்களை நாங்கள் ஏற்கவில்லை.
தமிழ் மக்கள் என்ற அடிப்படையில் யாரையும் அவமதிப்பது எங்கள் நோக்கமல்ல, இந்தநிலையில், ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக இவ்வாறு தடை விதிக்கப்பட்டிருப்பது ஆரோக்கியமான ஒரு விடயமாக இருக்காது.
இவ்வாறான பிண்னணியில் அரச்சுனா பேசிய சில விஷயங்கள் சில தவறுதலாக இருக்கலாம், அவ்வாறு தவறாக இருக்கும் பட்சத்தில் நாங்கள் அதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் மன்னிப்பு கேட்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
2 வாரங்கள் முன்