பயன்படுத்த முடியாத நிலையில் எழுதாரகை படகு :நேரடியாக சென்று பார்வையிட்ட சிறிதரன் எம்.பி
அனலைதீவு, எழுவைதீவு மக்களின் கடல் போக்குவரத்துற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுப்போம் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
நீண்டகாலமாக அனலைதீவு, எழுவைதீவு மக்களின் கடல் போக்குவரத்தில் பாவனை இன்றி காணப்படும் எழுதாரகை படகை இன்று பார்வையிட்ட பின் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
ஆறு வருடங்களாக பயன்படுத்தப்படாமல்
அனலைதீவு பகுதிகளுக்கான பயணத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த எழுதாரகை படகுச் சேவை கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த படகு கடந்த ஆறு வருடங்களாக பயன்படுத்தப்படாமல் காரைநகர் இறங்கு துறையில் நிறுத்தப்பட்டிருக்கிறது.மிகப்பெரிய அளவிலே துருப்பிடித்து பாவிக்க முடியாத அளவுக்கு காணப்படுகின்றது
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கா தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கூட்டத்திலும் நான் இந்த விடயம் தொடர்பிலே பிரஸ்தாபித்திருந்தேன்.
இன்று நேரடியாக அதனை நாங்கள் பார்வையிட்டோம் இந்த எழுதாரகை இனி பாவிக்க கூடிய ஒரு படகாக தோன்றவில்லை
அனலைதீவு மக்களின் கடல் பயணத்திற்காக தொடர் நடவடிக்கை
ஏனென்றால் இதனுடைய இயந்திரத்திற்கான எரிபொருள் என்பது ஒரு நிமிடத்திற்கு ஒரு லிட்டர் என்ற அடிப்படையில் எரிபொருள்பாவனை இருக்கிறது ஒரு நாளைக்கு பயணம் செய்வதற்கான இந்த அளவு மிகக் கூடிய செலவாகும் அதனுடைய பராமரித்தல் பிறகு மாதம் ஒருமுறை அதனை சேவிசுக்கு உட்படுத்தல் போன்ற விடயங்கள் காணப்படுகின்றது.
இந்த விடையம் தொடர்பாக. அனலைதீவு மக்களின் கடல் பயணத்திற்காக தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என கருத்து தெரிவித்தார்
இவ் விஜயத்தில் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் அன்னலிங்கம் அன்னராசா மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



