முதல்வர் விஜய்யிடம் பறந்த கோரிக்கை: சென்னையில் பள்ளிவாசல்கள் மீது நடந்த தாக்குதல் பின்னணி
சென்னையில் உள்ள பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னணியில் இருப்பவர்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று நவாஸ் கனி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
சென்னை வடபழனி, கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவங்கள் ஆழ்ந்த கவலை, அச்சம், சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவரான நவாஸ் கனி எம்.பி. சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை சந்தித்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளனார்.
காவல்துறையினர் கைது
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த 14 -ம் திகதி வடபழனி பள்ளிவாசலிலும், 26 -ம் திகதிகோயம்பேடு பள்ளிவாசலிலும் அடுத்தடுத்து தாக்குதல்கள் நடந்துள்ளன. இச்சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்.

வடபழனி பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிகிச்சை முடிந்தவுடன் அவரை சிறையில் அடைப்பதாக காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர். அதேபோல, கோயம்பேடு பள்ளிவாசலில் தாக்குதல் நடத்தியவரையும் காவல் துறையினர் கைது செய்து, வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இரு சம்பவங்களிலும் தொடர்பு உடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களது பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்தும் விரிவாக விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |