தனது அமைச்சர்களின் தவறுகளுக்கு ஜனாதிபதி அநுர அளித்த விளக்கம்
அமைச்சர்கள் பொதுக் கூட்டங்களில் வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பான அறிக்கைகளை வெளியிடுவதில்லை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
அது அறியாமை காரணமாக இருக்கலாம் என்றும் மனிதர்கள் கையினால் சிறுதவறுகள் நடப்பது பொதுவானது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபத்தில் அவ்வாறான அறிக்கையை வெளியிட்ட பிரதி அமைச்சர் ஒருவர், வேறு இடத்தில் தொடர்புடைய அறிக்கையை சரிசெய்துள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குறிப்பிட்டுள்ளார்.
அறிவுறுத்தல்கள்
இதன்படி, இது போன்ற விடயங்களில் ஊடகங்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் குழுவை அழைத்து அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை சேதப்படுத்துவதாகவும், அது அரசாங்கத்தை மோசமாகப் பாதிப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
🛑 you may like this..!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
