மற்றுமொரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கடும் வாக்குவாதம்...! மோதிக்கொண்ட அரசியல்வாதிகள்
தென்னிலங்கையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியின் போது ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (National People's Power) பிரதிநிதிகளுக்கு இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி சார்கபாக முன்னிலையாகியிருந்த ஹேஷா விதானகே (Hesha Withanage) மற்றும் தேசிய மக்கள் சக்தி சார்பில் மகிந்த ஜயசிங்க (mahinda jayasinghe) பிரசன்னமாகியிருந்தனர்.
தேங்காய் கழுதை
“இருபது வருடங்காளாக ஆசிரியராக கடமையாற்றிய போதிலும் எந்தப் பாடசாலையிலும் கற்பிக்கப்படவில்லை” என மகிந்த ஜயசிங்கவுக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகேவினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டையடுத்து இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தாம் எந்தவொரு சட்டவிரோதமான செயற்பாடுகளையும் செய்யவில்லை எனவும், இந்த நாட்டின் அரசியலமைப்பின் கீழ் தொழிற்சங்க உரிமைகளை மட்டுமே அனுபவித்து உள்ளதாகவும் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் மாணவர்களின் கல்விக்கு தான் தொடர்ந்து சேவையாற்றி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த வாக்குவாதம் தீவிரமடைந்ததையடுத்து மகிந்த ஜயசிங்க, ஹேஷா விதானகேவை “தேங்காய் கழுதை” (pol Buruva) என திட்டியிருந்தமை குறிப்பிடத்தகது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |