கனடா மாற்றும் பாலினேசியா அழகிகளை பின்தள்ளி திருமதி உலக அழகிப் போட்டியில் இந்திய அழகி முதலிடம்; 21 ஆண்டுகளின் பின் இந்தியாவுக்கு கிடைத்த மகுடம்!
திருமணமான பெண்களுக்கான உலக அழகிப்போட்டி அமெரிக்காவில் நடைபெற்றுள்ளது.
இந்த போட்டி அமெரிக்காவில் உள்ள வெஸ்ட்கேட் லாஸ் வேகாஸ் ரிசார்ட் எனும் சொகுசு விடுதியில் நடைபெற்றிருந்தது.
இவ்வாண்டுக்கான திருமணமான பெண்களுக்காக 'திருமதி உலக அழகி (மிஸஸ் வேர்ல்டு)' போட்டியில் இந்திய பெண் தேர்வாகியுள்ளார்.
திருமதி உலக அழகி
திருமணமான பெண்களில் சிறந்த அழகியை தெரிவு செய்யும் இந்த போட்டிக்கு 63 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்குபற்றியிருந்தனர்.
32 வயதான சர்கம் கவுசல் எனும் இந்திய பெண்ணும் குறித்த போட்டியில் கலந்துகொண்டிருந்தார்.
சர்கம் கவுசலுடன் பாலினேசியா நாட்டின் அழகி மற்றும் கனடா நாட்டின் அழகி ஆகியோர் இறுதிப்போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
இதில் இந்திய அழகியான சர்கம் கவுசல் சிறந்த அழகியாக தெரிவாகி முதலாம் இடத்திற்கான கிரீடத்தை சுவீகரித்ததுடன், பாலினேசியா மற்றும் கனடா அழகிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டனர்.
21 ஆண்டுகளின் பின்னர் இந்தியப் பெண் வெற்றி
இது 21 ஆண்டுகளின் பின்னர் இந்தியாவுக்கு கிடைத்துள்ள திருமதி உலக அழகி பட்டமாகும்.
இதற்கு முன் இந்தியா சார்பில் 2001 ம் ஆண்டு அதிதி கவுரிகர் எனும் பெண் குறித்த மகுடத்தை வெற்றி பெற்றிருந்தார்.
இவருக்கான கிரீடத்தை கடந்த ஆண்டுக்கான திருமதி உலக அழகி ஷாலின் போர்டு சூட்டி கெளரவித்தார்.
சர்கம் கவுசல்
இந்தியாவையும், உலகத்தையும் நேசிக்கிறேன் என வெற்றி குறித்து திருமதி உலக அழகி சர்கம் கவுசல் சமூக வலைத்தளங்களில் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் காஷ்மீரின் ஜம்முவை சொந்த இடமாக கொண்ட சர்கம் கவுசல் இந்திய கடற்படை அதிகாரியான அடி கவுசல் என்பவரை 2018 ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம் நாள் திருவிழா

