டயானா கமகேவின் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
டயானா கமகே(Diana Gamage) பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின்(Mujibur Rahman) நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டயானா கமகே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் தெரிவாகியிருந்தார்.
அதனை தொடர்ந்து ஆளும் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்து அரசில் இணைந்து கொண்டார்.
டயானா கமகேவின் பதவி நீக்கம்
இந்நிலையில், இரட்டைக் குடியுரிமை கொண்ட காரணத்தினால் டயானா நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க தகுதியற்றவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது முஜிபுர் ரஹ்மான் கொழும்பு மாநகரசபையின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
எனினும் முஜிபுர் ரஹ்மானை தேசியப் பட்டியலின் ஊடாக மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |