முல்லைத்தீவில் ஏற்பட்ட தீ பரவல்: தீக்கிரையாகிய தேக்கங்காடு
Mullaitivu
Sri Lankan Peoples
Wildfire
By Aadhithya
முல்லைத்தீவு (Mullaitivu) - முள்ளியவளை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான் வீதிக்கு அண்மையில் உள்ள தேக்கங்காட்டில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறி்த்த தீப்பரவலானது நேற்று (27) ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மை நாட்களாக நிலவிவரும் கடும் வெப்பமான காலநிலையே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
தீயணைப்பு பிரிவு
இதன்போது, சுமார் 6 ஏக்கர் வரையான தேக்கங்காடு தீக்கிரையாகியுள்ளதுடன் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முள்ளியவளை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தில் தீயணைப்பு பிரிவு ஒன்று இல்லாத காரணத்தினால் தீ விபத்துக்களின் போது மக்கள் பாரிய சிரமத்தை எதிர்கொள்கின்றமை மேலும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்