தேசிய ரீதியில் வலி வடக்கு பிரதேச சபைக்கு கிடைத்த அங்கீகாரம்
Sri Lankan Tamils
Jaffna
Nothern Province
By Dilakshan
தேசிய ரீதியாக உள்ளூராட்சி மன்றங்களில் நடைபெற்ற செயற்திறன் மதிப்பீடு 2024 இல் வலி வடக்கு பிரதேச சபை 663.75 புள்ளிகளுடன் தேசிய ரீதியாக இரண்டாம் இடம் பெற்று வெள்ளி விருதை பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, சிறிலங்கா பிரதமர் பிரதமர் தினேஷ் குணவர்த்தன (Dinesh Gunawardena) முன்னிலையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும், வலி வடக்கு பிரதேச சபைக்கு, வேறுபட்ட நான்கு விடயங்களில் உயர் செயற்திறனுக்காக மூன்று விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
வரலாற்றின் மைல்கல்
இந்த நிலையில், வழங்கப்பட்ட இவ் விருதுகள் வலி வடக்கு பிரதேச சபை வரலாற்றில் ஒரு மைல்கல்லாக கருதப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்