Wednesday, Apr 9, 2025

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம் (படங்கள்)

Mullaitivu Sri Lanka
By Beulah 2 years ago
Report

புதிய இணைப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி நாளை (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று மாலை(03.00 மணிக்கு) விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் காவல்துறை பொறுப்பதிகாரி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் இடத்தைப் பார்வையிட்டு கலந்துரையாடி இருக்கின்ற வளங்களுடன் நாளை காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ, சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினம் ஆரம்பிக்கப்பட இருந்த மனித புதைகுழி அகழ்வுப் பணியானது நாளை (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என தெரிவித்தார்.

அகழ்வுப் பணிகள் எவ்வளவு காலம் இடம்பெறும் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ஏற்கனவே 13 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எப்போது நிறைவடையும் என்பது பற்றி தற்போது கூறமுடியாது. அகழ்வுப் பணி தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் எவ்வளவு காலம் நடைபெறும், எத்தனை இருக்கும் என்பது தொடர்பாக கூற முடியும் என மேலும் தெரிவித்தார்.

மூன்றாம் இணைப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்காக முல்லைத்தீவு நீதிபதி உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் தற்போது சம்பவ இடத்துக்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இருப்பினும் இதுவரை அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம் (படங்கள்) | Mullaitivu Kokkuthoduvai Excavation Sl

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம் (படங்கள்) | Mullaitivu Kokkuthoduvai Excavation Sl

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம் (படங்கள்) | Mullaitivu Kokkuthoduvai Excavation Sl

இரண்டாம் இணைப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் இன்று மீண்டும் முன்னெடுக்கப்படுவதில் உறுதியற்ற ஒரு நிலை காணப்படுவதாக ஐ.பி.சி தமிழின் முல்லைத்தீவு மாவட்ட செய்தியாளர் சண்முகம் தவசீலன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இன்று, சம்பந்தப்பட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இச்செய்தி வெளியிடப்படும் நேரம்(11.00 மணி) வரை அகழ்வுப்பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை என அவர் கூறினார்.

சம்மந்தப்பட்ட தரப்பினர் இன்று மாலை 03.00 மணியளவில் அவ்விடத்தில் ஒன்றுகூடி, அதன் பின்னரே அகழ்வுப் பணிகளுக்கான பூர்வாங்க வேலைகள் ஆரம்பிக்கப்படும் என கூறப்படுவதாக அவர் கூறுகிறார்.

(நேற்றைய தினம் பதிவு செய்யப்பட்ட காட்சி)


முதலாம் இணைப்பு

சம்மந்தப்பட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் இன்றைய தினம்(05) முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக, வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றில் கடந்த 31ம் திகதி இடம்பெற்றிருந்தது.

அகழ்வு பணிகள்

நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் அன்றைய தினம் முன்னிலையாகியிருந்தனர்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு நாளை ஆரம்பம் (படங்கள்) | Mullaitivu Kokkuthoduvai Excavation Sl

இதற்கமைய, இன்றைய தினம் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

08 Apr, 2022
மரண அறிவித்தல்

கரையூர், பருத்தித்துறை

07 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

06 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

07 Apr, 2022
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

05 Apr, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

முனைத்தீவு, New Jersey, United States

02 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
13ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Bad Marienberg, Germany, Hayes, United Kingdom

31 Mar, 2025