கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நிறுத்தம் - இன்றைய அகழ்வில் 13 க்கு மேற்பட்ட உடல்களின் எச்சங்கள் (படங்கள்)

Mullaitivu
By Vanan Jul 06, 2023 10:29 AM GMT
Report

புதிய இணைப்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் சீருடையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற விதமாக கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் தொடர்பிலான மேலதிக அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை(6) இடம் பெற்ற நிலையில், மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆரம்பமான அகழ்வுப் பணியின் போது முன்னதாக அடையாளம் காணப்பட்ட எழும்புக்கூடுகளுக்கு அருகில் காணப்பட்ட பகுதிகள் தோண்டப்பட்ட நிலையில் மேலும் பல எழும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. 

அதே நேரம் பிளாஸ்ரிக் பொருள், வயர் உட்பட சில சான்றுப் பொருட்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.   

முதல் நாள் அகழ்வில் 13 எழும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இன்னும் பல இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை ஆண் பெண் இருபாலரும் இருக்கலாம் எனவும் மேலதிக அகழ்வுப் பணி இடம்பெறவுள்ள நிலையில், இன்றைய அகழ்வு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

வருகின்ற வியாழக்கிழமை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் அனைத்து திணைக்களங்கள் மற்றும் சட்டத்தரணிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் புதைகுழி தொடர்பான மேலதிக அகழ்வுகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நிறுத்தம் - இன்றைய அகழ்வில் 13 க்கு மேற்பட்ட உடல்களின் எச்சங்கள் (படங்கள்) | Mullaitivu Is A Massive Human Burial Ground

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நிறுத்தம் - இன்றைய அகழ்வில் 13 க்கு மேற்பட்ட உடல்களின் எச்சங்கள் (படங்கள்) | Mullaitivu Is A Massive Human Burial Ground

இரண்டாம் இணைப்பு

கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வின் போது தற்போது வரை 13 மனித எச்சங்கள் (உடல எச்சங்கள்) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது அகழ்வுப் பணிகள் மதிய உணவிற்காக நிறுத்தப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நிறுத்தம் - இன்றைய அகழ்வில் 13 க்கு மேற்பட்ட உடல்களின் எச்சங்கள் (படங்கள்) | Mullaitivu Is A Massive Human Burial Ground

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நிறுத்தம் - இன்றைய அகழ்வில் 13 க்கு மேற்பட்ட உடல்களின் எச்சங்கள் (படங்கள்) | Mullaitivu Is A Massive Human Burial Ground

முதலாம் இணைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளது பெண் போராளிகளது உடல எச்சங்களாக இருக்கலாம் என சந்தேகப்படும் மனித எச்சங்கள், உடைகள் மீட்கப்பட்ட பகுதியில் இன்றைய தினம் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி T.பிரதீபன் முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா உள்ளிட்டவர்களினால் இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது. 

மனித எச்சங்கள்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு நிறுத்தம் - இன்றைய அகழ்வில் 13 க்கு மேற்பட்ட உடல்களின் எச்சங்கள் (படங்கள்) | Mullaitivu Is A Massive Human Burial Ground

ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மனித உரிமை சட்டத்தரணிகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பொது அமைப்புகள் பொதுமக்கள் உள்ளிட்ட பலரது கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த அகழ்வுப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது. 

கடந்த 29.06.2023 அன்று மாலை முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம் கொண்டு நிலத்தினை தோண்டியபோது நிலத்தில் புதைக்கப்பட்ட நிலையில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தினை தொடர்ந்து கொக்கிளாய் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.


இது தொடர்பாக 30.06.2023 நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குறித்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். 

இதன்போது குறித்த மனித எச்சங்கள் காணப்படுகின்ற பகுதியில் யூலை 6 திகதி (இன்று) அகழ்வுப் பணிக்கு நீதிபதி உத்தரவிட்டதோடு, அதற்குரிய நபர்களுக்கான உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அதுவரை எச்சங்ளை அழிவடையாமால் பாதுகாக்குமாறும் கொக்கிளாய் காவல்துறையினருக்கு பணிப்பு விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, திருநகர், Ermont, France

11 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், பரிஸ், France

09 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

13 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, ஸ்ருற்காற், Germany, Scarborough, Canada

10 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொழும்பு, Zürich, Switzerland

15 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025