வரி செலுத்துவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
2026 ஜூலை மாதத்திற்கான பெறுமதிசேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
வரியைச் செலுத்தத் தவறினால் அல்லது தாமதமாகச் செலுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
காசோலை, வங்கி வரைவோலை அல்லது செலுத்துகை ஆணை (Payment Order) மூலம் செலுத்தப்படும் தொகைகள் உரிய திகதிக்கு பிறகு பெறப்பட்டால், அவையும் தாமதமான செலுத்துகையாகவே கருதப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வற் அறிக்கை
மேலும், ஜூலை மாதத்திற்கான வற்(VAT) அறிக்கைகள் ஓகஸ்ட் 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக இணையவழியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பிடித்தம் செய்யப்பட்ட வரியை ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னரும், ஜூலை மாதத்திற்கான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை (SSCL) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னரும் செலுத்துமாறும் வரி செலுத்துவோருக்கு திணைக்களம் நினைவூட்டியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |