முல்லைத்தீவு குருந்தூர்மலைப் பகுதி பொதுமக்களின் காணிகளை விடுவிக்க பணிப்புரை!
Mullaitivu
Parliament of Sri Lanka
Vidura Wickramanayaka
By Kalaimathy
குருந்தூர்மலை பகுதியில் உள்ள ஒருதொகுதி காணிகளை விடுவிப்பது தொடர்பில் பௌத்தசாசன, சமய மற்றும் காலாசார அமைச்சர் கலந்துரையாடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய விவசாயம் மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்காக அளவீடு செய்யப்பட்ட காணிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளை உரிய நிறுவனங்களுடன் இணைந்து மக்களுக்கு வழங்குமாறு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு அமைச்சர் விதுர விக்ரமநாயக்க பணிப்புரை விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பௌத்தசாசன அமைச்சரின் ஆலோசனை
முல்லைத்தீவு குருந்தூர் விகாரையை அண்மித்த பகுதியில் தொல்பொருள் திணைக்களத்துக்குச் சொந்தமில்லாத காணிகளை விடுவிப்பது தொடர்பிலும் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்தசாசன, சமய மற்றும் காலாசார அமைச்சர் ஆலோசனைக் குழுவில் கலந்துரையாடப்பட்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்