தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு வலியுறுத்தல் விடுத்து முன்னாள் போராளி உண்ணாவிரதப் போராட்டம்!
Mullaitivu
Sri Lankan protests
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Kalaimathy
முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் உண்ணா விரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பேராளியும் சமூக செயற்பாட்டாளருமான வேலுப்பிள்ளை மாதவமேஜர் என்பவரே இன்று இந்த உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
தமிழ் தேசியத்தின் நிரந்தர தீர்வுக்காக தமிழ் தேசியத்தை நேசிக்கும் கட்சிகள் அமைப்புக்கள் அனைவரும் ஒன்றுபட வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
முன்னாள் போராளி
இவரது தந்தை நாட்டுப்பற்றாளராகவும், மூன்று சகோதரர்கள் மாவீரர்களாகவும் உள்ள நிலையில், இவரும் முன்னாள் போராளியாக இருந்து புணர்வாழ்வு பெற்று தற்போது சமூக செயற்பாட்டாளராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்