முல்லைத்தீவில் சாதனை படைத்த மாணவி (படங்கள்)
school
mullaitivu
student
scholarship exam
By Thavathevan
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்குட்பட்ட பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் 47 வருடங்களுக்கு பின் மாணவி ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
பனிக்கன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து பாடசாலையில் 1975 ஆண்டு மாணவி ஒருவர் மாவட்டமட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் சித்தி பெற்றிருந்தார்.
அதன் பிற்பாடு பல மாணவர்கள் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்றிருந்தாலும் கடந்த 47 வருடத்தின் பின்பு தவசீலன் புவனாஜினி எனும் மாணவி மாவட்ட வெட்டுப் புள்ளியைத் தாண்டி சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
குறித்த மாணவி 162 புள்ளிகளை பெற்றுள்ளார் முல்லைத்தீவு மாவட்ட வெட்டுப்புள்ளியாக 147 அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த மாணவி ஊடகவியலாளர் சண்முகம் தவசீலனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.



1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி