விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்!

Sri Lanka Police Mullaitivu Journalists In Sri Lanka
By Eunice Ruth Mar 13, 2024 02:54 PM GMT
Report

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் திருச்செல்வம் திவாகர் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் தலைமை அலுவலகத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முல்லைத்தீவு குமுழமுனை பகுதியில் அமைந்துள்ள குறித்த ஊடகவியலாளரின் வீட்டிற்கு இன்றைய தினம் (13) சென்ற அளம்பில் காவல்துறையினர் இந்த அழைப்பினை எழுத்துமூலம் வழங்கியுள்ளனர்.

விசாரணை

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் மூலம் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக திருச்செல்வம் திவாகர், எதிர்வரும் 15 ஆம் திகதி இல.149, பூட்டானி கெப்பிடல் கட்டிடம், கிருளப்பனை அவநியூ, கொழும்பு - 05 என்ற விலாசத்தில் அமைந்துள்ள தலைமை காரியாலயத்தில் முன்னிலையாக வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்! | Mullaitivu Terrorism Tamil Journalist Statementtid

விகாரைக்குள் திருட்டு: இரு பெண்கள் கைது

விகாரைக்குள் திருட்டு: இரு பெண்கள் கைது

முல்லைத்தீவு காவல்துறை பொறுப்பதிகாரியின் ஒப்பத்துடன் இது தொடர்பான கடிதம் திவாகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

காரணம்

மேலும், குறித்த ஊடகவியலாளரான திவாகர் புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளியுமாவார்.

பல ஊடகங்களில் பணியாற்றியுள்ள இவர் தற்போது முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் மாவட்ட ஊடக அலுவலகராக கடமையாற்றுவதோடு முல்லைத்தீவு மாவட்ட ஊடக அமையத்தின் உப தலைவராகவும் சுயதீனமான ஊடகவியலாளராகவும் இருந்து வருகின்றார்.

விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்! | Mullaitivu Terrorism Tamil Journalist Statementtid

இவருக்கு வழங்கப்பட்ட கடிதத்தில் எதற்காக அழைக்கப்பட்டுள்ளார் என்ற காரணம் குறிப்பிடப்படவில்லை.

காரணத்தை அறிவதற்காக குறித்த ஊடகவியலாளர் முல்லைத்தீவு காவல் பொறுப்பதிகாரியினையும் மாவட்ட பயங்கரவாத தடுப்பு பிரிவினரையும் நேரில் சந்தித்து கேட்ட போது காரணம் தெரியாது என அவர்கள் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அடுத்த தேர்தலில் தனது இலக்கை அறிவித்தார் பிள்ளையான்

அடுத்த தேர்தலில் தனது இலக்கை அறிவித்தார் பிள்ளையான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016