மன்னார் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு: முல்லைத்தீவிலிருந்து இளைஞர்கள் நடைப்பயணம்
மன்னார் (Mannar) காற்றாலைக்கு திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவிலிருந்து (Mullaitivu) இரு இளைஞர்கள் நடைப்பயணமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த நடைப்பயணம் நேற்றிலிருந்து (10) முன்னெடுக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து இந்த நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பகுதியில் அமைக்கப்பட உள்ள காற்றாலைக்கு மன்னார் மக்களால் பெரும் எதிர்ப்பு வெளியிட்டு வருவதன் காரணமாக அதற்கு பலம் சேர்க்கும் முகமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்கள்
இந்தநிலையில், செல்லும் வழிகளில் துண்டு பிரசுரங்களையும் வீதி ஓரங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த குறித்த இளைஞர்கள், “காற்றாலை அபிவிருத்தி திட்டம் மக்களுக்கானதா ? முதலாளிகளுக்கானதா ? எமது வளத்தை அழித்துவிட்டு யாருக்கானது உங்கள் அபிவிருத்தி.
எமது நிலங்களும் மற்றும் எமது வளங்களும் எமக்கானதே, முதலாளிகளின் அடிவருடிகளாக இல்லாது எம் எதிர்காலத்தையும் சிந்திப்போம் கனியமணல் சுரங்கம் மன்னார் தீவிற்கு மட்டுமல்ல முழுநாட்டிற்கும் ஆபத்தானது” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
