அல்லைப்பிட்டி படுகொலை நடைபெற்ற இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று (13) யாழ்ப்பாணம் (Jaffna) - அல்லைப்பிட்டியில் (Allaipiddy) நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
தீவகம் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் அல்லைப்பிட்டி படுகொலை இடம்பெற்ற இடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வும் நடைபெற்றது.
இதன் போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களின் நினைவாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
நினைவுச் சுடர்கள்
அத்தோடு அல்லைப்பிட்டி சேமக் காலையில் காணப்படும் அல்லைப்பிட்டி படுகொலையின் போது படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்கு தந்தையுமான பேனார்ட் றெக்னோ சிவில் சமூக செயற்பாட்டாளரும் யாழ் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி விரிவுரையாளருமான மாணிக்கவாசகர் இளம்பிறையன், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் அல்லைப்பட்டி படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |